கார்த்திக்கிடம் ஒரு பழக்கம் உண்டு, தினமும் காலை எழுந்தவுடன் கணினியில் இசையை ரீகரம் இடுவது. அன்று அவன் வலை பின்னலில் பாரதியின் பாடலை தவழவிட்டான்.
பின்னர் தன் இரு பிள்ளைகளை எழுப்பி காலை கடன்களை முடிக்க செய்துவதினான். வேலையின் இடை இடையே பாரதியின் படலை பாடியவரே இருந்தான் " அக்னி குஞ்சொன்றை கண்டேன்.." அவன் கடைக்குட்டி விஸ்வன் தன் காலை கடனை இறக்கிய வன்னம் தன் தந்தை படிய பாடலை புரியாமல் கேட்டுகொண்டு இருந்தான். அவன் படிப்பது அந்த நகரிலேயே பெரிய பள்ளிக்கூடம் இன்டர்நேஷனல் ஸ்கூல். ஆங்கில எ,பி,சி ஐ நாம் படிப்பது போல் அல்லாமல் அ,ப,க என படிப்பவன். அவன் மட்டும் அல்ல அவன் அண்ணன் ராகுலும் அதே கதை தான் ஆங்கிலதில் அப்பனையே அல்லோலபடுதுவார்கள் . வீட்டில் இவர்கள் ராஜ்யம்தான், கார்த்திக் பயப்படுவது இவ் உழகிலேயே இவர்களுக்கு மட்டும்தான். கார்த்திக் கற்றுகொடுத்தது ஒன்றை தான் " எதையும் கேள்வி கேள்......யார் எதை சொன்னாலும் கேள்வி கேள் ....பின்பு ஆராய்ந்து முடிவை நீ உன்னை நம்பி எடு" என்பதைத்தான்.
அழகான குடும்பம்...., சரி விசயத்துக்கு வருவோம் பாட்டு படிய தந்தையை புரியாமல் பார்த்து கொண்டு இருந்த விஸ்வன்
" டாட் அது என்ன போன்திடை ....?" என்றான்.
கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை என்னடா என்ன கேட்ட என்றான் கார்த்திக். "அதன் டாடி நீ இப்ப படுனேயே அக்க..இஞ்சு பூண் ...திடை ன்னு அது என்ன...?"
"டே கண்ணா அது அக்க இஞ்சு இல்லைட அக்னி குஞ்சு ..அதாவது தீ பொறி....புரியுதா?" என்றான்.
"என்ன தீ பொறின்ன ..." கார்த்திக்கிற்கு லேசா கண்ணு கட்டியது.
"டாய் தா இல்லைட தீ டா தீ பொறி "
" அப்படின்னா.."என்றான் மீண்டும்.
"தீ பொறின்ன ...... எப்படி சொல்லறது இவனுக்கு ....... அதன் பயர் .... சுமால் பயர்... லிட்டில் பயர்."
"ஓகோ அதென்ன பூண் திடை ...?' அடுத்த கேள்வி. கார்த்திக்கிற்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை
"கண்ணா அது பொந்திடை டா அதாவது எ ஹோல் ... " என்றான் பொறுமையாக தன் கடமை உணர்ந்து. சற்றே புரிந்தது போல் சமாதனம் அடைந்தான் விச்வன். இந்த உரையாடல் ராகுலுக்கும் அவன் அம்மாவிற்கும் சிரிப்பை வரவழைத்தது.
மீண்டும் பாட எத்தணிகையில் சற்றே கவலையுற்றான். என்ன மடத்தனமான செயல் செய்கிறோம், நாம் ஆங்கிலத்தை பயின்றால் நம் மூளை தமிழில் மொழிபெயர்த்து புரிந்து அறிதல் போய், ஆங்கிலம்.... ஆங்கிலம்.... என்று நம்மால் தான் பேச முடியலையே நம் பசங்களாவது கற்று கொள்ளட்டும் என்று ஆங்கிலத்தை கற்று கொடுத்ததனால் தமிழையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து புறிகிற மடதனதிர்க்கு நம் வாரிசுகளை வளர்த்துவிட்டோமே ..............தன் மடத்தனம் தாய் மொழியை தலையில் ஆணி அடித்தார் போல் இறங்கியது கார்த்திக்கிற்கு ............................
No comments:
Post a Comment