0
அமெரிக்காவில் இன்னுமொரு பொருளாதார சரிவு வருமா?
"Double-dip recession" அமெரிக்காவை வதைக்க போகிறதா என்று கடந்த ஒரு வருடமாக பல பேர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் double-dip recession கூடிய சிக்கிரம் நிச்சயமாக வருமென்கிறார். செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா இரண்டாவது dip-ல் காலை வைத்து விடும் என்கிறார்.
lhttp://online.wsj.com/video/the-big-interview-with-robert-shiller/228DD2D8-A65D-466A-AECF-5C95AA88533F.html
இந்த வருட இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் GDP வளர்ச்சி முன்பு கணித்ததை விட குறைவாக இருப்பதாக நேற்று மத்திய வங்கி அறிவித்தது. சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வீட்டு விற்பனைகள் 27 சதவிகிதம் விழுந்ததாக National Association of Realtors அறிக்கை வெளியிட்டார்கள்.
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் ஒரு பெரிய பிரச்னை. ஒரு பக்கம் கம்பெனிகள் நல்ல தகுதியுள்ள ஆட்கள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இன்னொரு பக்கம் பல நூறாயிரம் மக்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகள் சீனாவுக்கு சென்று விட்டதால் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். பேசாமல் ஒவ்வொரு அரசாங்க பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு உதவி ஆசிரியரை நியமித்தால், மாணவர்களுக்கும் நல்லது, வேலையில்லா திண்டாட்டமும் குறையும் என்று ராபர்ட் ஷில்லர் ஐடியா கொடுக்கிறார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் பள்ளிகளின் பட்ஜெட்டை குறைப்பதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். இதில் உதவி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருக்கப் போகிறது?!
அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பொருளாதார மாற்றங்களை கவனித்து வாருங்கள். அமெரிக்க பங்கு சந்தை வீழ்ந்தால் அது இந்திய சந்தையிலும் மற்ற ஆசிய சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.