உதிர்க்கப்பட்ட இரு மொட்டுக்கள்

  
செய்தி தாள்களில் இருந்து......



கோவை  நவ.9-2010:
 கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி கொன்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரில்,  மோகன்ராஜ் என்பவன் இன்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.
அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர்.  குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான்.
போகும் வழியில் தனக்கு துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமாக தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தான்.
கோவை நகரையே உலுக்கிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய கொலையாளிகளான ‌கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் (33), அவரது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள், அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்தது.
இந்நிலையில், கொலை குற்றவாளிகளான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‌போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக ‌தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
 கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக செட்டிபாளையம் அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, ‌கொடூர கொலைகாரன் மோகன்ராஜ், போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர்.
குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, மோகன்ராஜை நோக்கிச் சுட்டார். இதில் மோகன்ராஜ் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.
மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் ‌போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். The accused in the siblings murder case Mohanraj who was killed in an encounter with the police in Coimbatore on Tuesday Photo: K Ananthan.

No comments:

Post a Comment