என் பார்வையிலும் வாழ்விலும் பெண்களின் ஆளுமை - பகுதி 1



பெண்கள்...

பெண் என்றாலே நம் கண் முன்னே வருவது அழகு. பெண்மை, ஆண்மை இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம். ஆனால் ஆண்மை என்றால் உடனே நினைவுக்கு வருவது வீரம். ஏன் இந்த உணர்வு நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாய் நம் உடற் கூற்றிலும், மூளையின் மையத்திலும் ஏன் உயிர் அனுவிழும் முறுக்கேற்றி ஆழமாய் ஆணி அடித்துவிட்டனர். அது இன்றும் பெண்ணை ரசிபதிலும், ருசிபதிலும் தன் வீரத்தை காட்டிகொண்டு இருக்கிறான். 

பொதுவாக பெண்கள் இளம் வயதில் நமக்கு ஏற்படும் அதே உணர்வையே தங்கழுக்குளும்  கொண்டுள்ளனர். அதை தூண்டி தனக்கு அடிமை யாக்கும் ஆண்மையும் ஒரு பெண்மையே. 

பெண்களை சரி நிகர் கோணத்தில் கண்டு ரசிக்க தெரியவில்லை என்றால் அவன் சந்ததிகளை மேலும் பெருகாமல் வதைத்து  விடுவதே மேல் அல்லவா. (அவர்களுக்கு குழந்தைகளை பெறாமல் இருப்பதை கூறுகிறேன்) 

பெண்மையை அருகில் இருந்து அவர்கள் உலகை ரசித்து பாருங்கள் அவர்கள் உலகமே அழகு தான். நான் சிறுவயதில் எப்பவும் விழையாட்டவே வாழ்ந்து வந்தவன். அழகான பெண்ணின் ஆளுமை எப்பவும் என்னோடவே பயணித்து வந்து உள்ளது. இங்கே அழகான பெண் என்பது நம்மை சில வார்த்தைகளால், சில பார்வைகளால், சில கொஞ்சழ்களால் ...எப்படி என்று எனால் விரிவு செய்ய முடியவில்லை ஆனால் நிச்சயமாய் உடல் கூற்றால் அல்ல. ஆனால் ஏன்...  வளர்ப்பில் தாயின் பேச்சுக்கள் என்னை ஆளவில்லை, மாறாக என் தந்தையின் தோழமையே ஆளுமை கொண்டுள்ளது. 


சில அனுபவங்களும் ... பார்வைகளும்....

ஒரு முறை என் சிறு வயதில் என் வீட்டிற்கு அருகில் ஒரு புது குடும்பம் குடியேறியது. பொதுவாக நாம் புதியவர்களை, மூத்தோர்களை அத்தை, மாமா என்போமே அது போலவே நானும்.  அவர்கள் இளம் வயதே, ஒரு சிறு பெண் கை குழந்தை தவழ்த்த வண்ணம் வீடு எப்பவும் கலகலப்பாய் இருக்கும். அருகில் இருந்த அணைத்து குடும்பமும் சற்று வயது முதியவர்களே அவர்களை ஒப்பிடுகையில். அதுவும் அந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தில் சற்று காலம் தாண்டி பரந்த எண்ணம் உள்ளவர்கள் சிறிதே (என் தந்தையை போல்). அந்த காலகட்டத்தில் இரவு உடை என்று பெண்ணிற்கு (நைட்டி) அந்த ஊரில் தனியாக இல்லை. முதன் முதலில் அந்த உடை தரித்தவர் அந்த ஆண்டி தான். ஏன் என்றால் அவர்கள் நகரத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் அதை அங்கிருத்தவர்கள் பார்த்த பார்வைகள் வேறு. " என்ன பெண் இவள் கன்றாவி உடை அணித்து சின்ன பிள்ளைகளை கெடுத்து விடுவாள் போல நம்ம கலாச்சாரம் என்ன ... " என்று பெண்களே மருகி நின்றனர். ஆண்களை கேட்கவா வேண்டும் என் காது படவே " சரியான கட்டை..." என்று உரைதவர்கள் உண்டு. அவர்கள் கண் போகும் பார்வை என்னையே என் தந்தை இடம் சில கேள்விகளை கேட்க வைத்தது. " ஏன் அய்யா அந்த மாமாக்கள் அந்த ஆண்டிய  ....... இப்படி பேசுகிறார்கள்? ஏன் இன்று கூட நம் அம்மாவிடம் இன்னொரு அத்தை எங்க அந்த உலகழகி நிமிட்டிகிட்டு வருவாழே ... வந்தாலா? என கேட்கிறார்கள்" என்றேன். என் வார்த்தைகளை உற்று கேட்டவர் என் தோல் மீது கை வைத்து "வா வெளியே போகலாம்" என்றார். 


நடந்து கொண்டே சிறிய யோசனைக்கு பின்னர் " கண்ணா ...... " என்று பெரிய ஒரு விளக்கமே கொடுத்தார். அதில் எனக்கு பதிந்தவை ஆடைகள் நம் உடலை மறைக்கவே. சில சமயம் அதுவே நம் கௌரவத்தை நிர்ணயக்கிறது ....இதில் தான் பார்வைகள் மாறுகின்றது, பொறாமையும் சில சமயம் ...இது ஆற்றாமையால் கூட விளையும் பெண்களுக்கு. இதை பெரியவர்கள் அல்லது ஆண்கள் தனக்கு வசதியாக்கி கொண்டு தவறான வார்த்தைகள் பேசுவார்கள் பார்வையும் பார்ப்பார்கள். அதை பெரியதாக்கி கொள்ளாமல் உடை நம் வசதிக்கு தக்கவாறு (இதில் வசதி என்பது பணம் அல்ல) காலகாலமாய் மாற்றங்கள் கொண்டுவரும், மாற்றங்களை சரியான கண்நோடத்தில் கொண்டு செல்வது தான் நல் அறிவாகும். மனதை விசாலமாய் கற்பதில் அலையவிடு இது உன்னை வேறு பாதைக்கு இட்டுசென்றுவிடும் என்பதே நான்  உணர்வது. 


காலகாலமாய் மாற்றங்கள் சில (பல) குறுகிய சிந்தனை வாதிகளிடம் குறுகிய வக்கிர கண்ணோட்டத்தையே விட்டு சென்றுள்ளது. இது எல்லாம் ஒரு மேட்டரா என்றால், இன்றும் பெண்ணின் உடைகளை எத்தனை கண்கள் கற்பழிகின்றது. உடைகளை ரசிப்பது இரு வகைகள் சாதரணமாக பெண் தனக்குரிய, தனக்கு பொருந்தி வரும் உடைகளை அணியும் போது அதே கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஒரு வகை. அதையே சற்று ஊடறுவி அந்த உடை வழியே அவள் தேகத்தை யூகிப்பது வேறு வகை. சில பெண்கள் தன் தேகத்தை ரசித்து போகட்டும் என்றும் உள்ளனர், அந்த சிறு விகிதத்தை ஆண்களின் பெருவாரியினர் சுட்டி காட்டி வாதாடுவது அவர்கள் அசிங்கமான விதண்டாவாதமே அன்றி வேறு என்ன. 




என் பள்ளி பருவத்தில் ஓவியம் சற்று வரைவேன். அப்போதுதான் புதிதாக (என்ன எப்பவும் யாராவது புதுசா வந்துட்டே இருக்காங்க ....என்கிறேர்களா. என்ன செய்ய புதிசில் தானே பார்வையின் மாற்றங்களும் தெரிகின்றது) ஒரு டிராயிங் மிஸ் வந்திருந்தார்கள். ஓவியம் போலவே சற்று மிகையான அழகு. அவர்களுக்கு என் ஓவியம் மீது சற்று மரியாதை உண்டு. ஆனால் அதையே ஒரு சக ஆசிரியர் " என்ன கார்த்தி எப்பவும் மேடம் உன்னிடம் சிரிசிகிட்டே தோள்ல கை போட்ராங்க... நல்ல வழத்திய இருக்கேன்ன...அப்படி என்னடா..... ஒருவேளை சிருசுணா புடிக்குமோ..." என்று என் நண்பர்கள் மற்றும் சில பெண், ஆண் ஆசிரியர்களோடு சேர்ந்து சிரித்தார்கள். இந்த வக்கிரம் எங்கே இருந்து வந்தது....


ஆனால் மேலே பார்த்த அனைத்தும் எனக்கு எவ்வாறு இருந்தது என்று கேட்பது புரியுது...


அந்த ஆண்டி என்னிடம் எப்பவும் தம்பி என்ற அன்பில் தான் என்னை வார்த்தார்கள். ஒரு முறை நான் பாடத்தில் பெயிலான போது...என்னை என் அம்மா பதம்பார்த்த போது என்னை என் அம்மாவிடம்மிருந்து விடுவித்து அழைத்து போய்விட்டார்கள். அவர்கள் வீட்டில் என் அருகில் அமர்த்து   என் முதுகை தடவி ஆறுதல் கூறி முத்தமும் மிட்டாரகள். அது என்னை சற்று ஆறுதல் 
படுதியதே அன்றி என் நண்பர்கள் பார்த்த விதத்தில் அழைத்து செல்லவில்லை அந்த முத்தம்.


அதே போல் என் ஆசிரியை, பல தடவை என்னை தன் தோளோடு தோளாய் என் தோளில் கை போட்டு " சபாஸ்..." சொல்லி இருக்கிறார். ஏன் என் சில பெண் ஓவியத்தை பார்த்து செல்லமாய் " உதடு இப்படி வரணும், நெற்றி வழிந்து வரணும், செஸ்ட்  தூக்கி வரையனும்..." என்று தலையில் கொட்டி  " பெண்கள்ன ரொம்ப பிடிக்குமோ.." என்று தன் அளவான புன்னகையில் என் ரசனையில் மேருகேற்றியதுண்டு. அவை யாவும் சிறிது கூட என்னை தவறாக பாதித்தது இல்லை. 


என் பார்வையில் பெண்கள் தொடரும்.... 
  




    .


     - 







புகை..

புகை...

இது என்னுள் அரம்பம்மானது ...
நண்பர்களின் தொற்றா...
தெனாவேட்டின்  ஆரம்பமா...

புகை எனும் பகை 
ஏன் நண்பனானான்...

முதல் புகை ... நாற்றன்களே
இரண்டாம்  புகை ... யோசனைகளே...
பின்னர் ஸ்டைல்...

அவனது நட்பு தொடர்ந்தது 

மெல்ல மெல்ல 
நட்பில் புகை ...
ஓய்வில் புகை...
டீக்கு பின் புகை...
மதுவின் போது புகை...
உணவுக்கு பின் புகை...
கோவத்தில் புகை...
சந்தோசத்திலும் புகை...
காதலில் புகை...
காதல் கவிதையிலும் புகை...
பகையில் புகை...
பேச்சில் புகை...
யோசனையிலும் புகை...

ஒரு நாளில் இரண்டு முறை
இறத்தல் என்பது போய்
 மூன்று...நான்கு...
முறை தினம் இறக்கலனேன்...

தந்தை அன்பில் கொஞ்சம்
தாயின் மிரட்டலில் கொஞ்சம்
நண்பனின் அறிவுரையில் கொஞ்சம்
காதலி கடைகண்ணில் கொஞ்சம்
மனைவியின் மருகலில் கொஞ்சம்
உடல் நல குறைவில் கொஞ்சம்
என வெட்டினாலும் 
தொடரும் சொந்தம்...

புகை ஒரு ஒட்டுண்ணி 

தொடதே என்னை என்ற புகை
என்னை பின்னல் 
காதலியாய் கட்டிகொண்டதேனோ...

புகையில் ஒன்றும் இல்லை
அது
என்னை சாந்த படுத்தவும் மில்லை
சலன படுத்தவும் மில்லை
சல்லி காசுக்கு பிரயோஜனம் மில்லை
ஆனாலும் 
தொட்டு தொடரும் யமன்

மூளை வேண்டாம் என்றது
மனம் ஒன்றே ஒன்று என்றது

தற்போது வாரத்திற்கு 
மூன்று அல்லது நான்காய் 
பயணிக்கிறேன்...

உங்களுக்காக ஒன்றை கூறுகிறேன் 

தொடாதே ...
தொட்டால் ஒன்னை
விடாதே...






கனவுகளின் பயணம் ...


மணம் கனக்கிறது
மனைவியின் மணமறிகையில் ...
அவள் கண்ணீரும் 
கீழ் விழாமல்  தத்தழிக்கையில்...

என்னுள்...   

பணம் கனக்கிறது 
கனவில் எடை தெளிவின்றி...

கோவம் அஹிம்சையாகிறது 
தவறுகளின் விகிதம் கணக்கிடுகையில் ...

நட்புகள் நகைக்கின்றன
வருடத்தின் வளர்ச்சி வாழ்வில் இல்லையென்று...

உறவுகளின் தூரம்
மேற்கில் மறைந்த சூரியனாய் ...

வெட்கம் மறைகின்றது
இகழ்வுகள் முகம் முன் தவழ்கையில்...

நம்பிக்கை நனைகிறது
கழவுகள் கன்னறிந்து   கடக்கையில்...
   
திறமை யோசிக்கிறது
இடது வழதறியா திருடுகையில்....

ரோசம் தமிழகராதியில் அறியேன்
உணவில்
காரம்மிட்டுகொள்  கரையறிவாய் என்றன வழினடத்திகள் ...

முகத்தின் சுருக்கம் சிரைகம்பிகழாய்...
 கிழிஞ்சழ்கள் தடுக்கி விழுந்த குழிகளாய்...

வாழ்க்கை பயணம் வருத்தாழும்
என் உதட்டு புன்னகை 
கண்ணின் ஊடுருவழில்
ஒன்றை உணர்த்துகிறது
சற்றேனும் உலகம்
ஒருநாள்
உன்னை சுற்றுமேன்று....
   

கனவுகளின் பயணம்