புகை..

புகை...

இது என்னுள் அரம்பம்மானது ...
நண்பர்களின் தொற்றா...
தெனாவேட்டின்  ஆரம்பமா...

புகை எனும் பகை 
ஏன் நண்பனானான்...

முதல் புகை ... நாற்றன்களே
இரண்டாம்  புகை ... யோசனைகளே...
பின்னர் ஸ்டைல்...

அவனது நட்பு தொடர்ந்தது 

மெல்ல மெல்ல 
நட்பில் புகை ...
ஓய்வில் புகை...
டீக்கு பின் புகை...
மதுவின் போது புகை...
உணவுக்கு பின் புகை...
கோவத்தில் புகை...
சந்தோசத்திலும் புகை...
காதலில் புகை...
காதல் கவிதையிலும் புகை...
பகையில் புகை...
பேச்சில் புகை...
யோசனையிலும் புகை...

ஒரு நாளில் இரண்டு முறை
இறத்தல் என்பது போய்
 மூன்று...நான்கு...
முறை தினம் இறக்கலனேன்...

தந்தை அன்பில் கொஞ்சம்
தாயின் மிரட்டலில் கொஞ்சம்
நண்பனின் அறிவுரையில் கொஞ்சம்
காதலி கடைகண்ணில் கொஞ்சம்
மனைவியின் மருகலில் கொஞ்சம்
உடல் நல குறைவில் கொஞ்சம்
என வெட்டினாலும் 
தொடரும் சொந்தம்...

புகை ஒரு ஒட்டுண்ணி 

தொடதே என்னை என்ற புகை
என்னை பின்னல் 
காதலியாய் கட்டிகொண்டதேனோ...

புகையில் ஒன்றும் இல்லை
அது
என்னை சாந்த படுத்தவும் மில்லை
சலன படுத்தவும் மில்லை
சல்லி காசுக்கு பிரயோஜனம் மில்லை
ஆனாலும் 
தொட்டு தொடரும் யமன்

மூளை வேண்டாம் என்றது
மனம் ஒன்றே ஒன்று என்றது

தற்போது வாரத்திற்கு 
மூன்று அல்லது நான்காய் 
பயணிக்கிறேன்...

உங்களுக்காக ஒன்றை கூறுகிறேன் 

தொடாதே ...
தொட்டால் ஒன்னை
விடாதே...






No comments:

Post a Comment