பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகள் நந்தனா


பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து பலியானார். பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது.


இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர். துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார்.


சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா. வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா - செய்தி  


அவர் படிய சிறந்த பாடல்களே இன்று அவர் சோகம் சொல்லும்  ......
இளைய ராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக்குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடலும், 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. "நான் ஒரு சிந்து ...." என்ற இலையரஜாவின் பாடலில் என்னை வசிகரித்த ...மன்னிக்கவும் எல்லோரையும் வசிகரித்த சித்ரா ...கடைசியாக நான் மிகவும் விரும்பி கேட்கும் " ஒரு நாள் மட்டும் சிரிக்க ...." என்ற பாடலில் நம்மை ஏங்க வைத்தார். ஆனால் இன்று அவர் ஏங்கலில் .......


அந்த படலை கீழ் வரும் வீடியோவில் கேட்டு ஏன் கண்ணீரை சிறுமி நந்தனா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய சமர்பிக்கிறேன். அந்த பாடலில் வரும் சில வரிகள் கீழே ...... 
தென்றலுக்கு நன்றி ....

கண் பார்வை பறித்து என்னை காண சொல்கிறாய் ...
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்க சொல்கிறாய் ....
ஊமையாய் மாற்றியே எனை பாடவும் கேட்கிறாய்...
நான் சரியா இல்லை தவறா நான் கனவு எழுதி களைந்து போன கதையா...முருகா...முருகா 

அவன் அன்றி யாரும் அவர் சோகம் தீர்க்க இயலாது ....

வெற்றித் திருமகள் வரிந்து வந்து புகழாரங்கள் சூட்டியபொழுதும் சித்ரா அவர்கள் தன்னுடன் பிறந்த விட்டகலாத மாறாத புன்முறுவலுடன் எளிமையாக , இனிமையாக எல்லாவற்றையும் சமசித்தத்துடன் ஏற்று காட்சிக்கு எளியவராக நிற்பது ஒரு அரும் பண்பாடல்லவா? அவர் தன்னை இச்சிகரத்தை அடைய உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தம் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா என்னும் மழலைக்கு தாயாகிய சித்ரா, மகளின் வருகைக்குப் பிறகு தன் வாழ்வு முழுமை பெற்றதாக உணருகிறார்.14 ஏப்ரல் 2011அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிர் .........

No comments:

Post a Comment