அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டம்



அண்ணா ஹசாரே  ஊழல் எதிர்ப்பு போராட்டம் நாளுக்கு நாள் வழுவடையும் நிலையில் ஏனோ அதன் மாற்று கருத்தும் உருவாகி கொண்டும் உள்ளது. இதை விவாத மேடையாக பார்க்க படுவதும், மேல் ஜாதி ......என ஜாதி போர்வை இடுவதும், அவர் காந்தியவாதியே இல்லை எனவும், பிற நாட்டில் ஊழல் மலிவதை விரும்பும் அமெரிக்க அண்ணாவிற்கு ஆதரவு தெரிவிப்பது ஏதோ சதி என்றும், கூட்டம் கூடுவது தவறென்றும், அண்ணா தன் கிராமத்தில் பல அடக்கு முறைகள் விதிக்கும் அதிகார வர்கத்தினர் என்றும்.....பல, பல கருத்துகளும் விவாதங்களும் FB , twitter , ப்ளாக் என வருவது சற்றே குழப்பமாக உள்ளது போல் ஒரு மாயை உருவாகிறது. 
இவரது வயது 74 எனில் இவர் எப்படி காந்தியவாதி, இவர் எந்த சுதந்திர போராட்டம் (64 வருஷம்) ஈடுபட்டார்? எனபது ......காந்தி யோடு போராடினால் மட்டும் தான் காந்தியவாதிய? சில செய்தி நிறுவனகள் சற்று மிகையாக கூறுவது தவறு என்கிறார்கள். அதற்க்கு  அண்ணா என்ன பண்ணுவார்? அதற்காக அவரது இந்த போராட்டம் விமர்சிக்க படுவது நியாயமா? பெரியாரின் முழக்கங்களை பின்பற்றுபவர்கள் என்ன பெரியாரோடு பிறந்தவ்ர்கலா? 
அண்ணாவின் போரட்டத்தை பார்த்து அண்டை நாடான பாகிஸ்தானில் ஒருவர் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார். அவரது பெயர் ஜெஹாங்கீர் அக்தர். 68 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்கக் கோரி இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதை எப்படி விமர்சனம் பண்ணுவீர்கள்? அண்ணா பாகிஸ்தான் நபர்களோடு சதி செய்கிற என்ற? 
அண்ணாவின் போரட்டத்தில் படித்தவர்கள், நல்ல பதவியில் இருதவர்கள், .... எல்லாம் சேனலில் (டிவி) தெரிவதனால் மேல் ஜாதியின் ஆதரவு அதிகம் என தவறான கூற்றுகள் பரப்புவது எவ்விதத்தில் நியாயம்? இதை ஒருவர் FB யில் கேட்க அதை ஒருவர் கண்ட வார்த்தைகளை கொண்டு அண்ணாவை விமர்சிப்பது என்பது தவறுதானே. ஆம் இத்தனை வருடங்கள் ஆனாலும் நம் ஜாதி தீ இன்னும் கனன்று கொண்டுதான் உள்ளது இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக எந்த செயலை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு வரை முறை இல்லையா? அதை தாண்டி நம் போராட்டம் இருக்க வேண்டாமா? நம் வரி பணத்தை கோடி கோடி யாக கொள்ளை யடிக்கும் கூட்டத்தை விட்டு விடலாமா? இது ஜாதி, மதம்,இனம்,மொழி,தாண்டி நம் நாட்டு நலனை தானே பார்க்க வேண்டும். ஒரு வேலை இந்த பிரிவினை வாதத்தை தூண்டுவது அந்த அரசியல் நரிகளின் வேலையோ!!!!!!!!. 
கூட்டம் கூட்டுவது, இது அரசியல் வாதிகள் ஆரம்பித்து வைத்தது. கூட்டம் இல்லா போராட்டங்கள் அரசியல் பிரமுகங்களுக்கு உறைப்பது இல்லை. பிரம்மாண்டங்கள் வரவேற்க படுகின்றன. இந்த கூட்டம் தானே அவர்களை பணிய செய்கிறது. இல்லை என்றால் ஏறி மிதித்து விடுவார்கள்.
மும்பை டப்பாவாலாக்கள் (உணவு எடுத்து செல்லும் 5000 பணியாளர்கள்) அவர்களது 125 ஆண்டு கால சரித்திரத்தில் ஒரு நாள் கூட  இதுவரை பணியிலிருந்து விலகி இருந்ததே இல்லை. மழையோ, வெயிலோ, புயலோ இவர்கள் பணியாற்றத் தவறியதில்லை. எந்தக் காரணத்திற்காகவும்  வேலையை நிறுத்தியதில்லை. இருப்பினும் அன்னாவின் போராட்டம் நியாயமானது என்று தெரிந்ததால் அவரை ஆதரித்து ஒரு நாள் மட்டும் பணி செய்யாமல் போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் என்ன ஜாதி....இது போன்ற போராட்டங்கள் எல்லாம் தாண்டி நேயத்துடன் செயல்பட வேண்டும். இவர்கள் மட்டும் இல்லை செக்ஸ் தொழிலாளர்கள் கூட கலந்து கொண்டனர்.
தென் இந்தியாவில் குறிப்பிடும் வகையில் பெரிய போரட்டங்கள் நடை பெறவில்லை என்ற குற்ற சாட்டு, மற்றும் இதற்கு அதரவு கரம் திரட்ட அண்ணா குழுவினர் தவறிவிட்டனர் என்ற குற்றசாட்டும் சற்று யோசிக்க வேண்டியவை. சுதந்திர போராட்டங்கள் எல்லாம் சரியான  தலைவர்கள் ஒவொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் நியமித்து அவர்கள் துணை கொண்டு பல கருத்தரங்குகள், நாடகங்கள் என மக்களை கொஞ்சம் உசுபேத்தி தான் ஆதரவு திரட்டினார்கள். ஆனால் இங்கோ நம் போராட்டமே தலைவர்களுக்கு எதிர்த்து தான். இருப்பினும் வட நாட்டவர்களை எழுப்பி விட்ட அந்த தலைவர்கள் கொஞ்சம் தென்நாட்டவர்களில் சில நல்ல தலைவர்களின் துணை கொண்டு இன்னும் கொஞ்சம் மக்களை நல்லாவே தேற்றி இருக்கலாம். நம் மக்கள் நம் பாஷையில் உசுபேற்றினால் தான் மடக் என உறைக்கும் இல்லை எனில் நமக்கென்ன வென இருந்து விடுவார்கள். ஆனால் ஒன்று, கொஞ்சம் சரியாக திட்டம் மிட்டு நடத்தினால் வட நாட்டையெல்லாம் நம்மவர்கள் சாபிட்டுவிடுவார்கள். 
போராட்டங்கள் செய்ய விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரையும் அவமதிக்காமல், விமர்ச்சனகள் போராட்டதிற்கு வெற்றியை கூட்டும் வண்ணம் இருக்குமாயின் இதில் வெற்றிபெறலாம். அதை தவிர்த்து நம் பிரிவனைகளை, வேறு கோபங்களை இப்போது காட்டாமல் .....அல்லது சற்றே ஒதுங்கி போராடுபவர்களை யாவது வாழ்த்தி வழியனுப்புங்கள். 




  

No comments:

Post a Comment