Work Style of SOFTWARE

சாப்ட்வேர் கம்பனியின்வேலை 

"ஏம்பா  இந்த "ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர் படிச்சவங்க  எல்லாம்  நிறைய சம்பளம் வாங்கிட்டு,  பந்தா பண்ணிட்டு  ஒரு  தினுசாவே அலையுறீங்களே?  அப்படி

என்னதான்  வேலை  பார்ப்பீங்க?" –

நியாயமான  ஒரு  கேள்வியை கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே  மாதிரி  எல்லா வேலையும்  அவனோட வீட்டுல இருந்தே  செய்யணும். இதுக்காக எவ்வளவு  பணம் வேணுமானாலும்  செலவு செய்ய தயாரா  இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த  மாதிரி  அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல  இருக்குற Bank,இல்ல எதாவது  கம்பெனி,  "நான் செலவு  செய்ய  தயாரா இருக்கேன். எனக்கு இத  செய்து கொடுங்க  கேப்பாங்க. இவங்கள நாங்க  "Client"னு  சொல்லுவோம்.

"சரி"

இந்த  மாதிரி Client-அ  மோப்பம் பிடிக்குறதுக்காகவே  எங்க பங்காளிக  கொஞ்ச  பேர  அந்த அந்த  ஊருல  உக்கார  வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales  Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client  கிட்ட பேச்சுவார்த்தை  நடத்துவாங்க.

காசு  கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு  கேள்வி கேப்பான். உங்களால  இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு  அவங்க கேக்குற எல்லாம்  கேள்விக்கும், "முடியும்"னு பதில்  சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய  பெரிய படிபெல்லாம் படிச்சி  இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப  திரும்ப  சொல்றதுக்கு எதுக்கு MBA  படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம்  இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி?  இந்த  மாதிரி பங்காளிக  எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500நாள்ல முடிக்க  வேண்டிய வேலைய 60  நாள்ள முடிச்சு தரோம், 50  நாள்ல  முடிச்சு தரோம்னு பேரம்  பேசுவாங்க.

இதுல யாரு  குறைஞ்ச  நாள சொல்றாங்களோ அவங்களுக்குப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க  முடியும்?  ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன  உடனே client  சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50  நாள்ல அவனுக்கு  என்ன வேணும்னு அவனுக்கும தெரியாது,  என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு  ப்ரோஜெக்ட்னு ஒன்ன  நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது  இதுல்ல, எங்களுக்கு இது  வேணும்,  அது  வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" -  அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி  கைய  பிசஞ்சிகிட்டே"இதுக்கு நாங்க CR raiseபண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த  பணத்துக்கு  நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம்.

இப்படியே 50  நாள்  வேலைய500  நாள்  ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம்  தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு,  பாதி வெட்டிட்டு வர  முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன  பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும்,ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

 "அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே  தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா  குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து  கைய  நீட்டுவோம். எப்போ எவன்  குழி பறிப்பானு டென்ஷன் ஆகி  டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப  நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்  இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய  கூட  தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்  தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட  வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட்,  மோடுல் லீட்,  டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி  பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா  வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு,  அவங்க மட்டும் தான்  எல்லா  வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர், வேலைக்கு  சேரும் போதே  "இந்த குடும்பத்தோடமானம்,  மரியாதை உன்கிட்ட தான்  இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு  பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ்  பசங்க  தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா  வேலை?"

"இந்த டெவலப்பர்  பண்ற வேலைல  குறை  கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத  மருமக  கை பட்டா குத்தம், கால்  பட்டா  குத்தம் இங்குறது  மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை  கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி  இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு  வேலைய  முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது  எப்படி..?  சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,அந்தக் குற்ற உணர்ச்சி  எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு  அந்த  அவமானத்துக்கு பதிலா  தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி  விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த  கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா  இருந்துச்சு. அன்னைக்கு டீம்  மீட்டிங்ல வச்சி  நீ  இருமின,உன்னோட ஹேர்  ஸ்டைல் எனக்கு  புடிகலை." இப்படி எதாவது  சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன  எடுத்து  தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள்  தூங்கிட்டு  போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன  பின்ன ஆனாலும் முடிச்சி  கொடுத்துட்டு கைய கழுவிட்டு  வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,  நம்ம நாட்டுல பாதி  பேரு  வேலை இல்லாம தான்  இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும்,  அவனால அத  புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற  மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து  போய், "எங்கள தனியா  விட்டுடாதீங்க.  உங்க டீம்-ல  ஒரு ஒன்னு,  ரெண்டு பேர உங்க  ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி  புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and  Support".
இந்த வேலை  வருஷ கணக்கா  போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது  ஒரு  பொண்ண கல்யாணம்  பண்ணி வீட்டுக்குகூட்டிட்டு  வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது,  வருஷ  கணக்கா நிறைய  செலவு  செஞ்சு பராமரிக்க வேண்டிய  விசயம்னு" இப்போ  தான்  கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."கம்ப்யூட்டர் படிச்சவங்க  எல்லாம்  aநிறைய சம்பளம் வாங்கிட்டு,  பந்தா பண்ணிட்டு  ஒரு  தினுசாவே அலையுறீங்களே?  அப்படி

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

0

அமெரிக்காவில் இன்னுமொரு பொருளாதார சரிவு வருமா?

"Double-dip recession" அமெரிக்காவை வதைக்க போகிறதா என்று கடந்த ஒரு வருடமாக பல பேர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் double-dip recession கூடிய சிக்கிரம் நிச்சயமாக வருமென்கிறார். செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா இரண்டாவது dip-ல் காலை வைத்து விடும் என்கிறார்.

lhttp://online.wsj.com/video/the-big-interview-with-robert-shiller/228DD2D8-A65D-466A-AECF-5C95AA88533F.html

இந்த வருட இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் GDP வளர்ச்சி முன்பு கணித்ததை விட குறைவாக இருப்பதாக நேற்று மத்திய வங்கி அறிவித்தது. சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வீட்டு விற்பனைகள் 27 சதவிகிதம் விழுந்ததாக National Association of Realtors அறிக்கை வெளியிட்டார்கள்.

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் ஒரு பெரிய பிரச்னை. ஒரு பக்கம் கம்பெனிகள் நல்ல தகுதியுள்ள ஆட்கள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இன்னொரு பக்கம் பல நூறாயிரம் மக்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகள் சீனாவுக்கு சென்று விட்டதால் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். பேசாமல் ஒவ்வொரு அரசாங்க பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு உதவி ஆசிரியரை நியமித்தால், மாணவர்களுக்கும் நல்லது, வேலையில்லா திண்டாட்டமும் குறையும் என்று ராபர்ட் ஷில்லர் ஐடியா கொடுக்கிறார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் பள்ளிகளின் பட்ஜெட்டை குறைப்பதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். இதில் உதவி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருக்கப் போகிறது?!

அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பொருளாதார மாற்றங்களை கவனித்து வாருங்கள். அமெரிக்க பங்கு சந்தை வீழ்ந்தால் அது இந்திய சந்தையிலும் மற்ற ஆசிய சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.

ஈரமில்லா தமிழ்.....மண்

ஈரமில்லா தமிழ்.....மண் 

நீங்கள் தமிழர்கள் ...
அப்போ நாங்கள் 
மட்டும் ஏன்?...... (அகதிகள்....)
வா தமிழா 
எம் பூமியில் .....மன்னிக்கவும் (அவன் பூமி)

லங்கா புரியில் முன்பு 
நம் இன ராவணனை அரக்கன் 
என வடக்கனவன் வழிமொழிந்தான்
அதை ஏற்று 
நம் பதின்முகன் (10) எண்டரியாமல்
வழிமொழிந்து 
மழித்தாய்

அதே வடக்கனவன் 
இன்று அந்நியனுடன் தினைந்து
எம்மையும் 
எம் காப்பகனையும் 
கூரிட்டுவிட்டான்

ஏன் நாங்கள் ராவணனின் 
பிள்ளைகள் என்ற .............

இதோ என்னை பார் ஈரம் வரும் .............

‘sexually abused girls’ in Tamil refugee camp

இப்பொழுதாவது.... 

அன்பே அரவணை 
ஆழ் மனதில் அடைத்த அன்பை
அமைதி எனும் 
ஆடை கட்டி மறைத்தாள் மறையுமோ 

ஆண்மை இன்றி அமைதி காத்ததில்
அண்டை நாட்டில் நம்மை இழந்தோம் .....

அணைத்துக்கொள்ள அன்னை இன்றி 
ஆதரவற்று அமரர்கள்லான 
அன்பு மலர்கள் .........

அரியணையில் அமர்ந்துகொள்ள........ 
அமர்ந்த அரியணையை ஆழ......
அனைத்திலும் அரசியல் 
ஆனால் 
அன்னையாக அரவணைக்க 
பெண்மையும் இல்லாமல் 
அற்று போனாயே
அன்பு (இல்ல) தமிழா....

உன் கருவில் 
கால் ஊன்றிருக்கும் கருகளையாவது 
கயம்மின்றி காப்பாய்.....
சுயதினைவோடு 

-----------------இவள் கசிந்த மலரிதழாய்

எதிர்பார்ப்பின் விழிம்பில்......

இரண்டு பெரியவர்களின்
எதிர்பார்ப்பில் (ஆசையில்)
 விழ்ந்தது
 இரு இழையவர்களின் இன்பம் ......

அதை இனிமையாக்க
 முயல்கிறார்கள்
அதே பெரியவர்கள் ஹா....

இணையுமோ  இ(தி)ரு  மனம்

இவன் மலராய்...

இவன் மலராய்...

மலர்ந்த மலரை
மயங்கவைத்தது மங்கையின் மனமா
மடித்தடிதது  மழையின் மாயமா
மண்டியிட வைத்தது புவியின் ஈரமா
இல்லை...

மலர்வேன் என்ற உன்னை
பழியிட்டே மங்க வைத்த மனித குணமா
வாழ்க்கை விளையாட்டு .........

நாம் ஒருவரின் அன்பை எதிர்பார்க்க
அவர் மீது உயிராய்....
அவர் ஒருவரின் மீது அன்பை எதிபார்க்க
அவர் மீது உயிராய்....
அவருக்கோ இவருக்கோ
இரண்டுக்கும் நடுவில்
நான் எப்போ .....
கேட்கிறது அன்பு