0

அமெரிக்காவில் இன்னுமொரு பொருளாதார சரிவு வருமா?

"Double-dip recession" அமெரிக்காவை வதைக்க போகிறதா என்று கடந்த ஒரு வருடமாக பல பேர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் double-dip recession கூடிய சிக்கிரம் நிச்சயமாக வருமென்கிறார். செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா இரண்டாவது dip-ல் காலை வைத்து விடும் என்கிறார்.

lhttp://online.wsj.com/video/the-big-interview-with-robert-shiller/228DD2D8-A65D-466A-AECF-5C95AA88533F.html

இந்த வருட இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவின் GDP வளர்ச்சி முன்பு கணித்ததை விட குறைவாக இருப்பதாக நேற்று மத்திய வங்கி அறிவித்தது. சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வீட்டு விற்பனைகள் 27 சதவிகிதம் விழுந்ததாக National Association of Realtors அறிக்கை வெளியிட்டார்கள்.

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் ஒரு பெரிய பிரச்னை. ஒரு பக்கம் கம்பெனிகள் நல்ல தகுதியுள்ள ஆட்கள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இன்னொரு பக்கம் பல நூறாயிரம் மக்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகள் சீனாவுக்கு சென்று விட்டதால் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். பேசாமல் ஒவ்வொரு அரசாங்க பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு உதவி ஆசிரியரை நியமித்தால், மாணவர்களுக்கும் நல்லது, வேலையில்லா திண்டாட்டமும் குறையும் என்று ராபர்ட் ஷில்லர் ஐடியா கொடுக்கிறார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் பள்ளிகளின் பட்ஜெட்டை குறைப்பதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். இதில் உதவி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எங்கே இருக்கப் போகிறது?!

அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் பொருளாதார மாற்றங்களை கவனித்து வாருங்கள். அமெரிக்க பங்கு சந்தை வீழ்ந்தால் அது இந்திய சந்தையிலும் மற்ற ஆசிய சந்தைகளிலும் பிரதிபலிக்கும்.

ஈரமில்லா தமிழ்.....மண்

ஈரமில்லா தமிழ்.....மண் 

நீங்கள் தமிழர்கள் ...
அப்போ நாங்கள் 
மட்டும் ஏன்?...... (அகதிகள்....)
வா தமிழா 
எம் பூமியில் .....மன்னிக்கவும் (அவன் பூமி)

லங்கா புரியில் முன்பு 
நம் இன ராவணனை அரக்கன் 
என வடக்கனவன் வழிமொழிந்தான்
அதை ஏற்று 
நம் பதின்முகன் (10) எண்டரியாமல்
வழிமொழிந்து 
மழித்தாய்

அதே வடக்கனவன் 
இன்று அந்நியனுடன் தினைந்து
எம்மையும் 
எம் காப்பகனையும் 
கூரிட்டுவிட்டான்

ஏன் நாங்கள் ராவணனின் 
பிள்ளைகள் என்ற .............

இதோ என்னை பார் ஈரம் வரும் .............

















‘sexually abused girls’ in Tamil refugee camp

இப்பொழுதாவது.... 

அன்பே அரவணை 
ஆழ் மனதில் அடைத்த அன்பை
அமைதி எனும் 
ஆடை கட்டி மறைத்தாள் மறையுமோ 

ஆண்மை இன்றி அமைதி காத்ததில்
அண்டை நாட்டில் நம்மை இழந்தோம் .....

அணைத்துக்கொள்ள அன்னை இன்றி 
ஆதரவற்று அமரர்கள்லான 
அன்பு மலர்கள் .........

அரியணையில் அமர்ந்துகொள்ள........ 
அமர்ந்த அரியணையை ஆழ......
அனைத்திலும் அரசியல் 
ஆனால் 
அன்னையாக அரவணைக்க 
பெண்மையும் இல்லாமல் 
அற்று போனாயே
அன்பு (இல்ல) தமிழா....

உன் கருவில் 
கால் ஊன்றிருக்கும் கருகளையாவது 
கயம்மின்றி காப்பாய்.....
சுயதினைவோடு 

-----------------இவள் கசிந்த மலரிதழாய்

எதிர்பார்ப்பின் விழிம்பில்......

இரண்டு பெரியவர்களின்
எதிர்பார்ப்பில் (ஆசையில்)
 விழ்ந்தது
 இரு இழையவர்களின் இன்பம் ......

அதை இனிமையாக்க
 முயல்கிறார்கள்
அதே பெரியவர்கள் ஹா....

இணையுமோ  இ(தி)ரு  மனம்

இவன் மலராய்...

இவன் மலராய்...

மலர்ந்த மலரை
மயங்கவைத்தது மங்கையின் மனமா
மடித்தடிதது  மழையின் மாயமா
மண்டியிட வைத்தது புவியின் ஈரமா
இல்லை...

மலர்வேன் என்ற உன்னை
பழியிட்டே மங்க வைத்த மனித குணமா
வாழ்க்கை விளையாட்டு .........

நாம் ஒருவரின் அன்பை எதிர்பார்க்க
அவர் மீது உயிராய்....
அவர் ஒருவரின் மீது அன்பை எதிபார்க்க
அவர் மீது உயிராய்....
அவருக்கோ இவருக்கோ
இரண்டுக்கும் நடுவில்
நான் எப்போ .....
கேட்கிறது அன்பு

Son of Tamilan

காலை எழுந்ததும் தன் கையை நன்றாக தேய்த்து கொண்டு தன் அருகில் இருக்கும் தன் மனைவியையும் இரு மகன்களையும் ஜன்னல் வழியே வந்த காலை  சூரியனின் துணை கொண்டு ரசித்தப்படியே இறைவனை வணங்கி எழுந்தான்  கார்த்திக். இளச்சிவப்பு வெளிச்சத்தில் தன் மனைவி நெற்றியில் மலர்ந்த காலை தெளிவில் உச்சி முகர்தான், புன்முருவழ்ளிட்டால் அழகிய தீபமாய் இமை மூடியவாறே.

கார்த்திக்கிடம் ஒரு பழக்கம் உண்டு, தினமும் காலை எழுந்தவுடன்  கணினியில் இசையை ரீகரம் இடுவது. அன்று அவன் வலை  பின்னலில் பாரதியின் பாடலை தவழவிட்டான்.

பின்னர் தன் இரு பிள்ளைகளை எழுப்பி காலை கடன்களை முடிக்க செய்துவதினான்.  வேலையின்  இடை இடையே பாரதியின் படலை பாடியவரே இருந்தான் " அக்னி குஞ்சொன்றை கண்டேன்.." அவன் கடைக்குட்டி விஸ்வன் தன் காலை கடனை இறக்கிய வன்னம் தன் தந்தை படிய பாடலை புரியாமல் கேட்டுகொண்டு இருந்தான். அவன் படிப்பது அந்த நகரிலேயே பெரிய பள்ளிக்கூடம் இன்டர்நேஷனல் ஸ்கூல். ஆங்கில எ,பி,சி ஐ நாம் படிப்பது போல் அல்லாமல் அ,ப,க என படிப்பவன். அவன் மட்டும் அல்ல அவன் அண்ணன் ராகுலும் அதே கதை தான் ஆங்கிலதில் அப்பனையே அல்லோலபடுதுவார்கள்  . வீட்டில் இவர்கள் ராஜ்யம்தான், கார்த்திக் பயப்படுவது இவ் உழகிலேயே  இவர்களுக்கு மட்டும்தான். கார்த்திக் கற்றுகொடுத்தது ஒன்றை தான் " எதையும் கேள்வி கேள்......யார் எதை சொன்னாலும் கேள்வி கேள் ....பின்பு ஆராய்ந்து முடிவை நீ உன்னை நம்பி எடு" என்பதைத்தான்.

அழகான குடும்பம்...., சரி விசயத்துக்கு வருவோம் பாட்டு படிய  தந்தையை புரியாமல் பார்த்து கொண்டு இருந்த விஸ்வன்
" டாட் அது என்ன போன்திடை ....?" என்றான்.
கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை என்னடா என்ன கேட்ட என்றான் கார்த்திக்.  "அதன்  டாடி நீ இப்ப படுனேயே அக்க..இஞ்சு பூண் ...திடை ன்னு அது என்ன...?"
"டே கண்ணா அது அக்க இஞ்சு இல்லைட அக்னி குஞ்சு ..அதாவது தீ பொறி....புரியுதா?" என்றான்.
"என்ன தீ பொறின்ன ..." கார்த்திக்கிற்கு லேசா கண்ணு கட்டியது.
"டாய் தா இல்லைட தீ டா தீ பொறி "
" அப்படின்னா.."என்றான் மீண்டும்.
"தீ பொறின்ன ...... எப்படி சொல்லறது இவனுக்கு ....... அதன் பயர் .... சுமால் பயர்... லிட்டில் பயர்."
"ஓகோ அதென்ன பூண் திடை ...?' அடுத்த கேள்வி. கார்த்திக்கிற்கு சிரிப்பதா அல்லது அழுவதா  என்றே தெரியவில்லை
"கண்ணா அது பொந்திடை டா அதாவது எ ஹோல் ... " என்றான் பொறுமையாக தன் கடமை உணர்ந்து. சற்றே புரிந்தது போல் சமாதனம் அடைந்தான் விச்வன். இந்த உரையாடல் ராகுலுக்கும் அவன் அம்மாவிற்கும் சிரிப்பை வரவழைத்தது.

மீண்டும் பாட எத்தணிகையில் சற்றே கவலையுற்றான். என்ன மடத்தனமான செயல் செய்கிறோம், நாம் ஆங்கிலத்தை பயின்றால்  நம் மூளை தமிழில் மொழிபெயர்த்து புரிந்து அறிதல் போய், ஆங்கிலம்.... ஆங்கிலம்.... என்று நம்மால் தான் பேச முடியலையே நம் பசங்களாவது கற்று கொள்ளட்டும் என்று  ஆங்கிலத்தை கற்று கொடுத்ததனால் தமிழையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து புறிகிற மடதனதிர்க்கு நம் வாரிசுகளை வளர்த்துவிட்டோமே ..............தன் மடத்தனம் தாய் மொழியை தலையில் ஆணி அடித்தார் போல் இறங்கியது கார்த்திக்கிற்கு ............................