S'pore National Day Rally 2010 Pt 1/8 - 29/08/2010




சிங்கப்பூரின் பிரதம மந்திரி உயர் திரு லீ ஹசீன் லூங் (Lee Hsien Loong ) என்னை கவர்ந்த ஒருவராக... என்னை மட்டும்மள்ள உங்களையும் கவர்த்துவிடுவார். இந்த வீடியோ எட்டு பாகங்களை கொண்டது (1/8......8/8) முழுமையாக தனிமையில் பார்க்கவும். அவர்களது தேசிய 4 மொழிகளில் தமிழும் ஒன்று...கவனிக்க ..... 

இவரது எளிய ஆங்கில உரைநடை, ஆழ்ந்த சிந்தனை, எளிய விளக்கம், மற்றவர்களுக்கு புரியும் படியாக படங்களுடன் விளக்கம், நகைசுவை..... மற்றும் நம் அரசியல்வாதிகளிடம் இல்லாத நேர்மையான, உண்மையான நாட்டின் மீது வைத்துள்ள அக்கறை....

நம் தலைவர்களின் உரையை கவனித்து பாருங்கள் எங்கோ யாருக்கோ புரிந்தால் போதும் என்று Hi -Tech ஆங்கில வார்த்தைகள், தலை சுற்றும் statistical analysis, தனது மெத்த மேதாவி  தனத்தை இந்த நாட்டின் வளர்ச்சியில் காட்டாமல் தன் ஆங்கில புலமையில் காட்டும் ஊழல் அரசர்களின் ........  ஒரு தலைவனின் பேச்சு  எப்படி இருக்க வேண்டும் பாருங்கள்.

அவரது பேச்சின் துளிகள்.....  
  1. 2007 ம ஆண்டு உலகமே தத்தளித்து கொண்டு இருக்க, கடனே இல்லாமல் தன் நாட்டை எவ்வாறு மீட்டார் (1/8 )
    1. ஊதிய உயர்வு எதிர்பாரா உழைப்பு, 
    2. எறும்புகளின் மலை கால சேமிப்பை பற்றி....
    3. 3% சிங்கப்பூர் தொழில் வளர்ச்சி .... 
    4. உற்பத்தி உயர்வின் முக்கியத்துவம்.
    5. தொழிலாளிகளின் புதிய சிந்தனை மற்றும் அவர்களின் பறந்த, உயர்ந்த பார்வை ( கழுகு பார்வை..)
    6. பெரிய நிறுவனகளின் கூட்டு முயற்சியில் சாதித்தவை...அதனால் அரசாங்கம் அடைந்த வரி .... (மெக்ஸிகோ என்னை கசிவு) 
    7. ஆட்களை குறைத்து, ஆக்கங்களின் மூலம், குறைந்த செலவில், கடுமையில்லா   நிறைவான உழைப்பில்.....
என அவரது உரையை கானுங்கள்      .....முதல் பாகம் 






இரண்டாம் ......மூன்றாம் ......பாகங்கள் வரசையாக.....

Watch all 8 parts in my Blog

http://deeparthik.blogspot.com/



S'pore National Day Rally 2010 Pt 2/8 - 29/08/2010




வாருங்கள் உங்களை அழைக்கிறது சிங்கப்பூர்.....

என்ன புரியவில்லையா கேளுங்கள் அவர்களுக்கு ஒரு நூறு ஆயிரம் ஆட்கள் தேவை....
  1. ஆட்களின் தேவையை உணர்த்துதல்
  2. ஆட்களின் வரவால் நமக்கு வரவே அன்றி தொல்லை இல்லை...என சிங்கப்பூர் மக்களுக்கு புரிய வைக்கும் விதம்
  3. மைக்ரோசாப்ட் நிறுவனம் எவ்வாறு முன்னேறுகிறது ....அவர்களின் தொலை நோக்கு  பார்வையும், அந்நிய மக்களை பயன்படுத்தும் விதமும்....
  4. முக்கியமாக அந்நிய மக்களோடு அன்யோநியமாக பலகுதலின் முக்கியத்துவமும்.... 









S'pore National Day Rally 2010 Pt 3/8 - 29/08/2010


சிங்கபுரின் முக்கிய பிரச்னை 

மக்கள் தொகை குறைவு ......

  1. அந்நியர்களின் அரவணைப்பை அழகா எடுத்துரைக்கும் விதம்.....



S'pore National Day Rally 2010 Pt 4/8 - 29/08/2010

போக்குவரத்து வசதிகள்
  1. புகை வண்டியின் மேம்பாடுகள்... 
  2. பிரச்சனைகளை சரியாக கண்டுகொண்டு அதை சரி செய்ய தேவையான வழிமுறை.....
  3. நொடிகளின் சேமிப்பில் ரயில்களின் எண்ணிகையை அதிகரித்தல்...
  4. சிரம்களின் போது பொறுமை காக்க வேண்டுதல்...
  5. நெட்வொர்கிங்கின் முக்கியத்துவம் அதற்காக செலவிட போகும் 60 பில்லியன் டாலர்....
  6. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை .....
  7. அடிக்கடி வாங்கி  விற்பதை தவிர்த்து .....எல்லோரும் பயனுறும் வண்ணம் சிறிய முதலீட்டில் வீடு, கடன் வசதி....
  8. Gradually Appriciating asset ......
  9. எல்லோருக்கும் வீடு....அந்நியர்களின் வசதிகளை கவனிப்பு....
  10. வெற்றி அரசின் கையில் மட்டும் இல்லை நம் பழகும், அனுசரிக்கும், நட்பில்.....அந்நியர்களை அரவணைத்து மேம்பாடு கானல்....



S'pore National Day Rally 2010 Pt 5/8 - 29/08/2010

கல்வியின் மேம்பாடு...
  1. கணிதம் மற்றும் அறிவியலின் முக்கியத்துவம்
  2. விழையாட்டு, கலை, இசை, நடனம்....எல்லாம் அவர்களின் கலாச்சாரத்துடன் மற்ற கலைகளையும் இணைத்தல்.....
  3. NCC இந்திய மண்ணில்...
  4. Primary ஸ்கூல்இன்  மாணவ, ஆசிரியர்களின் சதவிகிதத்தை மேம்படுத்துதல்....
  5. அவரவர்களின் தாய் மொழியின் முக்கியத்துவம் அதன் மேம்பாடு....
  6. பரீட்சை - அவர் கொடுக்கும் விரிவுரையை பாருங்கள்
  7. அனைவரும் ஒரே பள்ளியை நோக்கி செல்லாமல் அந்த பள்ளியின் சிறந்த திட்டத்தை அணைத்து பள்ளியிலும் கிடைக்க பெற்று அனைவரும் பயனுற....




S'pore National Day Rally 2010 Pt 6/8 - 29/08/2010

கல்வியின் முக்கியத்துவம் அவர் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் உரையில் இருப்பதில் இருந்து அவர் அதற்க்கு கொடுக்கும் மரியாதையை.....
  1. நன்கு படிப்பவர்களை வெளி நாட்டிற்கு செல்ல விடாமல் நம் நாட்டின் மேம்பாட்டுக்கு உபயோகம் படுத்துங்கள்....வசதி செய்து தாருங்கள் என அவரின் உரை மேலும் மேலும் மேன்மை......
  2. டாக்டர்களின் எண்ணிக்கை....
  3. 20 ஆண்டு கல்வியின் தொலை நோக்குதலும் அதற்க்கு அர்பணிக்க அழைப்பும்......
  4.  







S'pore National Day Rally 2010 Pt 7/8 - 29/08/2010


இளையவர்களின் ஆளுமை....
இளையவர்களின் அன்பு....
இளையவர்களின் தொண்டை வரவேர்தல்...
முதியவர்களின் பார்வை முன்னால் இளையவர்கள் 

தலைவர்களின் தன்மை ...தன்னை ஈடுபடுத்தி தன் நாட்டின் மேம்பாட்டில்
அக்கறை கொள்ளல்.....


S'pore National Day Rally 2010 Pt 8/8 - 29/08/2010

விளையாட்டில்...

அனைத்திலும் அவரது பார்வை மெய்சில்லிர்க்க வைக்கிறது ....

நமது ....

வரும் தேர்தலில் எல்லோரும் வாக்களிப்போம்
இளயவர்களின் திறன் நம் தேசத்தையும் மாற்றட்டும்
முதிய ஊழல் திறமைசாலிகளை
நாட்டை விட்டு அப்புற படுத்துவோம் .........



Osho: Why Jews have the most jokes


From "http://rsachi.blogspot.com/




Osho is talking about laughter. He says both laughter and boredom are the signature of intelligence. He says the Jews have the most collection of jokes. And he points out that they have also won the most Nobel prizes.

I go and check.

This is what I find:

JEWISH NOBEL PRIZE WINNERS
JINFO.ORG

At least 180 Jews and persons of half- or three-quarters-Jewish ancestry have been awarded the Nobel Prize, accounting for 22% of all individual recipients worldwide between 1901 and 2009, and constituting 36% of all US recipients during the same period. In the research fields of Chemistry, Economics, Physics, and Physiology/Medicine, the corresponding world and US percentages are 27% and 39%, respectively. Among women laureates in the four research fields, the Jewish percentages (world and US) are 38% and 50%, respectively. (Jews currently make up approximately 0.25% of the world's population and 2% of the US population.)
Chemistry (31 prize winners, 20% of world total, 28% of US total)
Economics (27 prize winners, 42% of world total, 56% of US total)
Literature (13 prize winners, 12% of world total, 27% of US total)
Peace (9 prize winners, 9% of world total, 10% of US total)
Physics (47 prize winners, 25% of world total, 36% of US total)
Physiology or Medicine (53 prize winners, 27% of world total, 40% of US total)
See also data on "other Nobels":
Jewish Recipients of the Kyoto Prize (25% of recipients)
Jewish Recipients of the Wolf Foundation Prize (34% of recipients)
Jewish Recipients of the US National Medal of Science (38% of recipients).

என் பார்வையிலும் வாழ்விலும் பெண்களின் ஆளுமை - பகுதி 1



பெண்கள்...

பெண் என்றாலே நம் கண் முன்னே வருவது அழகு. பெண்மை, ஆண்மை இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம். ஆனால் ஆண்மை என்றால் உடனே நினைவுக்கு வருவது வீரம். ஏன் இந்த உணர்வு நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாய் நம் உடற் கூற்றிலும், மூளையின் மையத்திலும் ஏன் உயிர் அனுவிழும் முறுக்கேற்றி ஆழமாய் ஆணி அடித்துவிட்டனர். அது இன்றும் பெண்ணை ரசிபதிலும், ருசிபதிலும் தன் வீரத்தை காட்டிகொண்டு இருக்கிறான். 

பொதுவாக பெண்கள் இளம் வயதில் நமக்கு ஏற்படும் அதே உணர்வையே தங்கழுக்குளும்  கொண்டுள்ளனர். அதை தூண்டி தனக்கு அடிமை யாக்கும் ஆண்மையும் ஒரு பெண்மையே. 

பெண்களை சரி நிகர் கோணத்தில் கண்டு ரசிக்க தெரியவில்லை என்றால் அவன் சந்ததிகளை மேலும் பெருகாமல் வதைத்து  விடுவதே மேல் அல்லவா. (அவர்களுக்கு குழந்தைகளை பெறாமல் இருப்பதை கூறுகிறேன்) 

பெண்மையை அருகில் இருந்து அவர்கள் உலகை ரசித்து பாருங்கள் அவர்கள் உலகமே அழகு தான். நான் சிறுவயதில் எப்பவும் விழையாட்டவே வாழ்ந்து வந்தவன். அழகான பெண்ணின் ஆளுமை எப்பவும் என்னோடவே பயணித்து வந்து உள்ளது. இங்கே அழகான பெண் என்பது நம்மை சில வார்த்தைகளால், சில பார்வைகளால், சில கொஞ்சழ்களால் ...எப்படி என்று எனால் விரிவு செய்ய முடியவில்லை ஆனால் நிச்சயமாய் உடல் கூற்றால் அல்ல. ஆனால் ஏன்...  வளர்ப்பில் தாயின் பேச்சுக்கள் என்னை ஆளவில்லை, மாறாக என் தந்தையின் தோழமையே ஆளுமை கொண்டுள்ளது. 


சில அனுபவங்களும் ... பார்வைகளும்....

ஒரு முறை என் சிறு வயதில் என் வீட்டிற்கு அருகில் ஒரு புது குடும்பம் குடியேறியது. பொதுவாக நாம் புதியவர்களை, மூத்தோர்களை அத்தை, மாமா என்போமே அது போலவே நானும்.  அவர்கள் இளம் வயதே, ஒரு சிறு பெண் கை குழந்தை தவழ்த்த வண்ணம் வீடு எப்பவும் கலகலப்பாய் இருக்கும். அருகில் இருந்த அணைத்து குடும்பமும் சற்று வயது முதியவர்களே அவர்களை ஒப்பிடுகையில். அதுவும் அந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தில் சற்று காலம் தாண்டி பரந்த எண்ணம் உள்ளவர்கள் சிறிதே (என் தந்தையை போல்). அந்த காலகட்டத்தில் இரவு உடை என்று பெண்ணிற்கு (நைட்டி) அந்த ஊரில் தனியாக இல்லை. முதன் முதலில் அந்த உடை தரித்தவர் அந்த ஆண்டி தான். ஏன் என்றால் அவர்கள் நகரத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் அதை அங்கிருத்தவர்கள் பார்த்த பார்வைகள் வேறு. " என்ன பெண் இவள் கன்றாவி உடை அணித்து சின்ன பிள்ளைகளை கெடுத்து விடுவாள் போல நம்ம கலாச்சாரம் என்ன ... " என்று பெண்களே மருகி நின்றனர். ஆண்களை கேட்கவா வேண்டும் என் காது படவே " சரியான கட்டை..." என்று உரைதவர்கள் உண்டு. அவர்கள் கண் போகும் பார்வை என்னையே என் தந்தை இடம் சில கேள்விகளை கேட்க வைத்தது. " ஏன் அய்யா அந்த மாமாக்கள் அந்த ஆண்டிய  ....... இப்படி பேசுகிறார்கள்? ஏன் இன்று கூட நம் அம்மாவிடம் இன்னொரு அத்தை எங்க அந்த உலகழகி நிமிட்டிகிட்டு வருவாழே ... வந்தாலா? என கேட்கிறார்கள்" என்றேன். என் வார்த்தைகளை உற்று கேட்டவர் என் தோல் மீது கை வைத்து "வா வெளியே போகலாம்" என்றார். 


நடந்து கொண்டே சிறிய யோசனைக்கு பின்னர் " கண்ணா ...... " என்று பெரிய ஒரு விளக்கமே கொடுத்தார். அதில் எனக்கு பதிந்தவை ஆடைகள் நம் உடலை மறைக்கவே. சில சமயம் அதுவே நம் கௌரவத்தை நிர்ணயக்கிறது ....இதில் தான் பார்வைகள் மாறுகின்றது, பொறாமையும் சில சமயம் ...இது ஆற்றாமையால் கூட விளையும் பெண்களுக்கு. இதை பெரியவர்கள் அல்லது ஆண்கள் தனக்கு வசதியாக்கி கொண்டு தவறான வார்த்தைகள் பேசுவார்கள் பார்வையும் பார்ப்பார்கள். அதை பெரியதாக்கி கொள்ளாமல் உடை நம் வசதிக்கு தக்கவாறு (இதில் வசதி என்பது பணம் அல்ல) காலகாலமாய் மாற்றங்கள் கொண்டுவரும், மாற்றங்களை சரியான கண்நோடத்தில் கொண்டு செல்வது தான் நல் அறிவாகும். மனதை விசாலமாய் கற்பதில் அலையவிடு இது உன்னை வேறு பாதைக்கு இட்டுசென்றுவிடும் என்பதே நான்  உணர்வது. 


காலகாலமாய் மாற்றங்கள் சில (பல) குறுகிய சிந்தனை வாதிகளிடம் குறுகிய வக்கிர கண்ணோட்டத்தையே விட்டு சென்றுள்ளது. இது எல்லாம் ஒரு மேட்டரா என்றால், இன்றும் பெண்ணின் உடைகளை எத்தனை கண்கள் கற்பழிகின்றது. உடைகளை ரசிப்பது இரு வகைகள் சாதரணமாக பெண் தனக்குரிய, தனக்கு பொருந்தி வரும் உடைகளை அணியும் போது அதே கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஒரு வகை. அதையே சற்று ஊடறுவி அந்த உடை வழியே அவள் தேகத்தை யூகிப்பது வேறு வகை. சில பெண்கள் தன் தேகத்தை ரசித்து போகட்டும் என்றும் உள்ளனர், அந்த சிறு விகிதத்தை ஆண்களின் பெருவாரியினர் சுட்டி காட்டி வாதாடுவது அவர்கள் அசிங்கமான விதண்டாவாதமே அன்றி வேறு என்ன. 




என் பள்ளி பருவத்தில் ஓவியம் சற்று வரைவேன். அப்போதுதான் புதிதாக (என்ன எப்பவும் யாராவது புதுசா வந்துட்டே இருக்காங்க ....என்கிறேர்களா. என்ன செய்ய புதிசில் தானே பார்வையின் மாற்றங்களும் தெரிகின்றது) ஒரு டிராயிங் மிஸ் வந்திருந்தார்கள். ஓவியம் போலவே சற்று மிகையான அழகு. அவர்களுக்கு என் ஓவியம் மீது சற்று மரியாதை உண்டு. ஆனால் அதையே ஒரு சக ஆசிரியர் " என்ன கார்த்தி எப்பவும் மேடம் உன்னிடம் சிரிசிகிட்டே தோள்ல கை போட்ராங்க... நல்ல வழத்திய இருக்கேன்ன...அப்படி என்னடா..... ஒருவேளை சிருசுணா புடிக்குமோ..." என்று என் நண்பர்கள் மற்றும் சில பெண், ஆண் ஆசிரியர்களோடு சேர்ந்து சிரித்தார்கள். இந்த வக்கிரம் எங்கே இருந்து வந்தது....


ஆனால் மேலே பார்த்த அனைத்தும் எனக்கு எவ்வாறு இருந்தது என்று கேட்பது புரியுது...


அந்த ஆண்டி என்னிடம் எப்பவும் தம்பி என்ற அன்பில் தான் என்னை வார்த்தார்கள். ஒரு முறை நான் பாடத்தில் பெயிலான போது...என்னை என் அம்மா பதம்பார்த்த போது என்னை என் அம்மாவிடம்மிருந்து விடுவித்து அழைத்து போய்விட்டார்கள். அவர்கள் வீட்டில் என் அருகில் அமர்த்து   என் முதுகை தடவி ஆறுதல் கூறி முத்தமும் மிட்டாரகள். அது என்னை சற்று ஆறுதல் 
படுதியதே அன்றி என் நண்பர்கள் பார்த்த விதத்தில் அழைத்து செல்லவில்லை அந்த முத்தம்.


அதே போல் என் ஆசிரியை, பல தடவை என்னை தன் தோளோடு தோளாய் என் தோளில் கை போட்டு " சபாஸ்..." சொல்லி இருக்கிறார். ஏன் என் சில பெண் ஓவியத்தை பார்த்து செல்லமாய் " உதடு இப்படி வரணும், நெற்றி வழிந்து வரணும், செஸ்ட்  தூக்கி வரையனும்..." என்று தலையில் கொட்டி  " பெண்கள்ன ரொம்ப பிடிக்குமோ.." என்று தன் அளவான புன்னகையில் என் ரசனையில் மேருகேற்றியதுண்டு. அவை யாவும் சிறிது கூட என்னை தவறாக பாதித்தது இல்லை. 


என் பார்வையில் பெண்கள் தொடரும்.... 
  




    .


     -